2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

எரிபொருள் விலைச் சூத்திரம் முடங்கும்?

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக்காலத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள எரிபொருள் விலைச் சூத்திரத்தை, சில மாதங்களுக்கு முடக்கும் முடிவை அரசாங்கம் எடுக்குமென, சிரேஷ்ட அமைச்சரொருவர், இப்பத்திரிகைக்குத் தெரிவித்தார். சில நாள்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள, அடுத்தாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திலேயே, இதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சில மாதங்களுக்கு, இவ்விலைச் சூத்திரம் முடக்கப்பட்டு, எரிபொருள் விலையுயர்வால் பாதிக்கப்பட்டுள்ள, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் முகமாக, உள்ளூர்ச் சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தாண்டின் ஆரம்பத்தில், உலக எரிபொருள் விலைகள் குறைவடைய எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த குறித்த அமைச்சர், அதன் காரணமாக, எரிபொருள் விலையைக் குறைக்க முடியுமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

எனினும், அண்மைய காலங்களில், எரிபொருள் விலை, பூகோள ரீதியில் குறைவடைய வாய்ப்புகள் தென்படவில்லை எனவும், அவ்வமைச்சர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .