2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘எவருக்கும் இடமளிக்கப்படாது ‘

Editorial   / 2019 ஜூலை 07 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையர்களுக்கு காணி உரிமையை வழங்கும் நடவடிக்கையை எவ்விதத்திலும் தடை செய்வதற்கு, எவருக்கும் இடமளிக்கப்படாதென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (7) அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

 இது தொடர்பில் மக்கள் ஆதரவளிப்பதால்,  வீதிக்கு இறங்கி  மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து,  காணி உரிமை  அவசியம் என்ற தகவலை நாட்டுக்கு தரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு அமைப்புகள் இந்த காணி உரிமைக்கு எதிராக செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், நாட்டிலுள்ள கோடீஸ்வரர்கள், இலட்சாதிபதிகளுக்கு இருக்கும் காணி உரிமையை அப்பாவி சாதாரண மக்களுக்கு வழங்க தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனை தடுத்து நிறுத்தவோ, தாமதப்படுத்தவோ எவருக்கும் முடியாதெனத் தெரிவித்துள்ளார்.

இந்த காணி உரிமை தொடர்பான சட்டத்தை நிறுத்துவதற்கு  வழக்குத் தொடர சிலர் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர், எக்காரணம் கொண்டும் இந்தப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .