2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.தே.கவின் தவிசாளர் இராஜினாமா

Editorial   / 2018 ஏப்ரல் 08 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்வதாக  அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அறிவித்துள்ளார்.

தனது பதவி இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அமைச்சர் மலிக் சமரவிக்ரம தனது பதிவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் முழுமையான மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில், தான் கட்சியின் தவிசாளர்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு யோசனையைப் பெற்றுக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ருவன் விஜேவர்தன குழுவால் அனைத்து பதவிகளும் மாற்றப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X