2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஒரு இலட்சத்து 19,982 பேர் பாதிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 28 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளம், கடும் மழை, மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் கடுங்காற்று ஆகிய அனர்த்தங்கள் காரணமாக, 10 மாவட்டங்களில், 38,541 குடும்பங்களைச் சேர்ந்த, 119,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வடக்கில் ஐந்து மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில், 38,209 குடும்பங்களைச் சேர்ந்த 118,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரிடரால் அந்த மாவட்டங்களில் மட்டும் இருவர் மரணமடைந்துள்ளனர். அத்துடன், 3,676 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில், 170 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளனவென, அந்த நிலையம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்களில் 2,827 குடும்பங்களைச் ​சேர்ந்த 8,983 பேர்,  27 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலாக, 24,184 குடும்பங்களைச் சேர்ந்த 74,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, 9,574 குடும்பங்களைச் சேர்ந்த 30,499 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த ஐந்து மாவட்டங்களை தவிர, கண்டி, மாத்தளை, புத்தளம், கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனைய ஐந்து மாவட்டங்களிலும் 332 குடும்பங்களைச் சேர்ந்த 1,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரேயொரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X