2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கடும் வரட்சியால் 10 இலட்சம் பேர் பாதிப்பு

Nirshan Ramanujam   / 2017 ஜூலை 24 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களில் கடுமையான வரட்சி நிலவுவதாகவும் நாடு முழுவதும் மூன்று இலட்சத்து 3 ஆயிரத்து 748 குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சத்து 55 ஆயிரத்து 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் 44 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து  482 குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சத்து 62 ஆயிரத்து 219 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 29 கிராம சேவகர் பிரிவுகளில் 58 ஆயிரத்து 589 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 10 ஆயிரத்து 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடமேல் மாகாணத்தில், குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் 34 கிராம சேவகர் பிரிவுகளில் 81 ஆயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 77 ஆயிரத்து 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வடமத்திய மாகாணத்தில் பொலனறுவை, அநுராதபுரம் மாவட்டங்களில் 13 கிராம சேவகர் பிரிவுகளில் 20 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, பதுளை, கண்டி, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வரட்சியான காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 8 மாகாணங்களிலும் வரட்சியை எதிர்நோக்கியுள்ள 118 கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பீலி தெரிவித்தார்.

இதேவேளை, கடும் வரட்சி காரணமாக விவசாய பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .