2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’கட்சிக்கு சம்மதமில்லை’

Editorial   / 2018 ஜூலை 07 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாகாணசபைத் தேர்தலுக்காக முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் முறைமைக்கு, தன்னுடைய கட்சி ஒப்புக்கொள்ளாது என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நேற்று (06) தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத ஒன்றாகவே, தற்போதுள்ள அரசாங்கத்தால் இந்த தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முறைமை, முஸ்லிம்களை, மிகவும் மோசமான முறையில் பாதிக்கும் என்றும் உள்ளூராட்சி தேர்தலில், பழைய முறைப்படி, 43 பேர் தெரிவு செய்யப்பட்ட இடத்தில், புதிய முறைமையின் கீழ் 13 பேர் மாத்திரமே தெரிவாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய முறைமை வாக்காளர்களை தூண்டுவதற்கு இலகுவாக அமைந்தது என்று கூறியுள்ள அவர், இலவச திட்டங்கள் மூலமே, சில வேட்பாளர்களின் வாக்காளர்களிடம் அறிமுகமாகினர் என்றும் கடந்த கால உள்ளூராட்சி தேர்தலின் போது, அரசியல் தேவைக்காக, எத்தனை கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், பௌத்த விஹாரைகள் பயன்படுத்தப்பட்டன என்பது தொடர்பில் தனக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .