2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காலிமுகத்திடலில் கறுப்புச் சட்டைப் போராட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்தக் கோரி, காலிமுகத்திடலில் மலையக இளைஞர்களால், மாபெரும் கறுப்புச் சட்டைப் போராட்டம் ஒன்று இன்று (24) முன்னெடுக்கப்பட உள்ளது.

19 மாதகால இழுத்தடிப்புக்குப் பின்னர், 2016ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம், இம்மாதம் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது.

இந்நிலையில், கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தும், இம்முறை அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும், முதலாளிமார் சம்மேளனத்துடன், கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்ளுக்கிடையிலான மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளும், இணக்கப்பாடுகளின்றித் தோல்வியில் முடிவடைந்திருந்தன.

இதனால், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மலையகத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும், தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இன்று, கறுப்புச் சட்டைப் போராட்டம் ஒன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக் வழியாக, மலையக இளைஞர், யுவதிகளே இந்த “ஒக்டோபர் 24” போராட்டத்தை திட்டமிட்டிருந்த நிலையில், மலையக இளைஞர்களால் ஒன்றிணைக்கப்பட்ட இப்போராட்டம், அரசியல் சாயமற்று, கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் பெருந்த்தோட்டக் கம்பனிகளுக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .