2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கைதிகளை தாக்கிய விவகாரம்: ஐ.நாவில் குரல்

Editorial   / 2019 ஜனவரி 19 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தாக்கப்பட்ட காணொளி, சமீபத்தில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட நிலையில், இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை, சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இந்தக் காணொளி வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள, இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, இது தொடர்பாக, ஐ.நா மனித உரிமை பேரவையின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டுச் செல்லப்படவுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளின்போது, இது தொடர்பாக முறையிட்டு கேள்வியெழுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காணொளி விவகாரத்தையடுத்து, இத்தாக்குதலுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பில், கடந்த 2018ஆம் ஆண்டு சிறைச்சாலைக்குச் சென்ற மனித உரிமைகள் ஆணையகம், கைதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென, சிறைச்சாலை தலைவரிடம் கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் எனினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலேயே, தற்போது கண்டனம் ​வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .