2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சாட்சிகளை அழிக்க வாய்ப்புகள் உள்ளது’

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளபோதிலும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யாதிருப்பதால், சாட்சிகளை அழிக்கவும் அச்சுறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

நாலக டி சில்வாவை, பதவியில் இருந்து நீக்காது பக்கச்சார்பற்ற விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது ​மேலும் தெரிவித்த அவர், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா ஆகியோருக்கு இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் கூறினார்.

மேலும், 12 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக பொலிஸ்மா அதிபர் மீது குற்றச்சாட்டும் காணப்படுகின்றது. இவை அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனின் அவர்கள் அந்த பதவியிலிருந்து விலக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் இவர்களை பதவி விலக்காதிருப்பதால், அரசாங்கம் ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிக்கின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .