2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சேறுபூச தடை

Editorial   / 2017 டிசெம்பர் 22 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தேர்தலில் போட்டியிருக்கின்ற வேட்பாளர்களை, அவமரியாதை, கிண்டல்​, அவமானப்படுத்தல் மற்றும் சேறு பூசுதல் ஆகியன முற்றுமுழுதாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது” என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   
இந்தச் சட்டத்தை மீறுகின்ற சகலருக்கு எதிராகவும், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த ​தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.   

இந்த விவகாரம் தொடர்பில், அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,   

“ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை ஏற்றுக்கொண்டு, அதன்பிரகாரம் செயற்படுவது சகலரினதும் பொறுப்பாகும். அதற்கு, சகலரும் கடமைப்பட்டுள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.   

“ஆணைக்குழுவின் கட்டளைகளை மீறுகின்ற சகருக்கு எதிராகவும், அரசியலமைப்பின் 104ஆம் பிரிவின் கீழ், சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அரச ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டியது. அரச அதிகாரிகளின் பொறுப்பாகும். அந்தப் பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்லும் அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  “விசேடமாக, தேர்தலில் போட்டியிடுகின்ற பெண் வேட்பாளர்களை, அவமரியாதைக்கு உட்படுத்தல், கிண்டல்​ செய்தல், மற்றும் அவமானப்படுத்தல் மற்றும் சேறு பூசுவதற்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என, அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X