2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி சிம்மாசன உரையை நிகழ்த்தப்போது இல்லை

Editorial   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 8ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஆற்றவுள்ளதாகம், எனினும் அந்த உரை தொடர்பில் விவாதமோ, வாக்கெடுப்போ நடத்தப்படமாட்டாது எனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கொள்கை விளக்க உரையையே ஆற்றவுள்ளதாகவும், சிம்மாசன உரையை ஆற்றப்போவது இல்லை எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உரையை தோற்கடிப்பதன் ஊடாக நாடாளுமன்றத்தை கலைக்கச் செய்ய ஒன்றிணைந்த எதிரணியினர்  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், ஜனாதிபதியின் உரை சிம்மாசன  உரை அல்லவெனவும், அது அரசாங்கத்தின் கொள்கை விளக்க  உரை மாத்திரமே என கூறப்படுகிறது இதனால், இந்த உரையின் மீது விவாதம் நடத்தப்படவோ, வாக்கெடுப்பு நடத்தப்படவோ சாத்தியமில்லை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பின், 33ஆம் உறுப்புரைக்கு அமைய,  நாடாளுமன்றம்  ஜனாதிபதியால் முடக்கப்பட்டு பின்னர்  மீண்டும் கூட்டப்படும் போது, அரசாங்கத்தின் கொள்கையை விளக்கி உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த உரை தொடர்பில்  விவாதம் நடத்தவோ, வாக்கெடுப்பு நடத்தவோ, அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி சிம்மாசன உரை  நிகழ்த்தப்போவது இல்லையெனவும், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய கொள்கைப் பிரகடனத்தையே அவர் வெளியிடுவார் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சில ஊடகங்கள் ஜனாதிபதியின் சிம்மாசன உரையுடன் அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்துவிடுமெனக் செய்திகளை வெளியிட்டிருந்ததாகவும், எனினும் அது முற்றிலும் தவறான செய்தி எனவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெஸ்ட்மினிஸ்டர் நடைமுறைக்கு அமைய, நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பமாகும்போது, அரசாஙங்கத்தின் தலைவர் உரையாற்றுவது வழமை எனவும் எனினும் அந்த உரை தொடர்பில் விவாதமோ, வாக்கெடுப்போ நடத்தப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .