2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஞானசார தேரருக்கு பிணை

Editorial   / 2018 ஜூன் 22 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமலாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தினார் மற்றும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டார் என்றக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஞானசார தேரரை, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்லுமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்க இன்று உத்தரவிட்டார்.

கடூழிய சிறைத்தண்டனை உத்தரவின் பிரகாரம், வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும், பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளா்ர.

காணாமலாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று திட்டித்தீர்த்து, அச்சுறுத்தினார் மற்றும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டார் என்றக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, ஞானசார தேரருக்கு, 6 மாதங்கள் அனுபவிக்கவேண்டிய ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை, கடந்த 14 ஆம் திகதி விதிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 09 பேரின் விளக்கமறியலும், ஹோமாகம நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்கவினால், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று நீடிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், நீதிமன்ற வளாகத்திலிருந்த கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதுடன், சந்தியா எக்னெலிகொடவை திட்டித்தீர்த்து, அச்சுறுதியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .