2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான செய்திகளில் உண்மையில்லை'

Editorial   / 2018 மார்ச் 27 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்களிப்பது தொடர்பில் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு  கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக ஆங்கில இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் தமிழ்மிரர் வினவியபோது, இந்த விடயம் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

முன்னதாக "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நாடாளுமன்றக் குழு, அடுத்த மாதம் 2ஆம் திகதி, கொழும்பில் சந்தித்து, தீர்மானத்தை எடுக்குமெனவும் அதுவரைக்கும், கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவிக்க முடியாது" எனவும் கூட்டமைப்பின் பேச்சாளரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம் (26) தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பது தொடர்பிலான தமிழ்க் கூட்டமைப்பின் இந்த தீர்மானம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்ததாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X