2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’பழைய கூட்டணிக்கு புதுக்கடிதம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை இணைத்து மீண்டும் ஒரு கூட்டணி அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான கூட்டணி தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவ்வாறான கடிதம் ஒன்றும் இணையத் தளங்களில் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளை (30) இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா அல்லது தனியான வேட்பாளரை களமிறக்குவதா என்பது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், குறித்த கடிதம் தொடர்பில் இரு தரப்பிலும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X