2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிரபாகரன் ஒரு புத்திசாலி அல்லர் என்கிறார் கோட்டா

Editorial   / 2018 மார்ச் 25 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை எனவும், அது நேரத்தை வீணடிக்கும் செயலென தான் கருதியதாகவும் தெரிவிக்கும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை ஒரு புத்திசாலி என தான் குறிப்பிடப்போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் 'யுத்தம்  முடிவுக்கு வருவதற்கு முன்னர், புலிகளுடன் கடைசி நேரப் பேச்சுவார்த்தைகள் ஏதாவது இடம்பெற்றனவா, எனவும், புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா?' எனவும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த கோட்டபாய "கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் அவ்வாறில்லை. வெளிநாட்டிலிருந்து அவரை கொழும்புக்கு கொண்டுவந்த போது அச்சத்துடன் காணப்பட்டார். அவர் அது தான் தமது கடைசித் தருணம் என்று நினைத்திருந்தார்.

எனினும் தற்போது அவர், மகிழ்ச்சியாக இருக்கின்றார் ஏனென்றால், அவருடைய கடந்தகாலம் மற்றும் தவறுகளைப் புரிந்து கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம், அவரை ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ நாம் அனுமதித்தோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X