2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிரித்தானியாவைச் சென்றடைந்தார் ஜனாதிபதி

Editorial   / 2018 ஏப்ரல் 16 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டன் நகரில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய பிரித்தானியாவைச் சென்றடைந்துள்ளர்.

'பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்முறை மாநாட்டில் சுபீட்சம், பாதுகாப்பு, நியாயம், பேண்தகுதன்மை ஆகிய அம்சங்களின் கீழ் பொதுநலவாய நாடுகளின் நோக்கங்ளை அடைந்துகொள்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இறுதியாக மோல்டா நாட்டில்  நடைபெற்றது. தற்போது இவ்வமைப்புக்கு  தலைமை வகிக்கும் மோல்டா இம்மாநாட்டின் போது தலைமைத்துவத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு வழங்கவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவை சந்திக்கவுள்ளதுடன், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றும் அரச தலைவர்ளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றும் ஜனாதிபதி, பொதுநலவாய வர்த்தக மன்றத்திலும் உரையாற்றவுள்ளார். பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வது தொடர்பாக நடைபெறும் மாநாட்டின் பிரதான உரையை நிகழ்த்துவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய விளையாட்டு சமேளனத்திலும் பிரித்தானிய மகாராணியின் 92ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறும் விசேட நிகழ்விலும்  ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X