2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பூஜித் பணி நீக்கம்?

Editorial   / 2019 ஜூலை 05 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கட்டயா விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை, பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறியக்கிடைக்கிறது.

பொலிஸ் மா அதிபராகப் பதவி வழங்கிய அதிகாரமிக்க அதிகாரியான ஜனாதிபதியால், அவரைப் பணிநீக்கம் செய்ய முடியுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர தொடர்பில், உள்ளக விசாரணையொன்றை, பொலிஸ் திணைக்களத்தால் நடத்த முடியுமென்றும் கூறப்படுகின்றது.

அதேபோன்று, குறித்த வழக்கில் அவர் குற்றவாளியல்லவெனத் தீர்ப்பு கிடைத்தால், மீண்டும் அவருக்கு பொலிஸ் மா அதிபர் பதவியை வழங்கவும் முடியுமென்று ​கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலைமையில், பொலிஸ் மா அதிபர் பதவியை, ​வேறொருவருக்கு வழங்க முடியாதென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் விவகாரத்தில், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றவியல் சட்டக்கோவையின் மனிதப் படுகொலைகள் மற்றும் அவற்றுக்கான உதவியை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், கைது​ செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது, பொலிஸ் காவலின் கீழ், நாரஹேன்பிட்டியில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .