2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’பேச்சுவார்த்தை வெற்றிப்பெற்றால் வேட்பாளர் இல்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் தனித்து வேட்பாளரை களமிறக்கும் சு.க.வின் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், அதற்கு மாற்று வழியாகவே தமது ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க சு.க. தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக நேற்று அறிவித்தது.

இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X