2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொதுத்தேர்தலுக்கு எதிராக மேலும் ஓர் அடிப்படை உரிமை மனு

Editorial   / 2020 மே 06 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்றத்தில் மேலும் ஓர் அடிப்படை உரிமை மனு இன்று (06) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த திகதி குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கூட்டும் நாள், உரிய காலத்தை தாண்டி செல்வதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள், ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .