2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’பொதுபல சேனா கலையும்’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தல் நடந்து முடிந்ததும், பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படுமென, அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ராஜகிரிய பிரதேசத்தில் இன்று (19) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய தேரர், சிறுபான்மையினரின் வாக்குகளின்றி, இந்த நாட்டில் அரசாங்கமொன்றை உருவாக்க முடியாதென்ற கருத்து நிலவியிருந்ததாகவும் ஆனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், அந்தக் கருத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த நாட்டுக்கு இப்போது, சிறந்த தலைமைத்துவமொன்று கிடைக்கப்பெற்று உள்ளதாகக் கூறிய ஞானசார தேரர், பொதுத் தேர்தலின் பின்னர், நல்லதோர் அமைச்சரவையுடன், நல்ல பயணமொன்றை மேற்கொள்ள முடியுமென்றும் இந்த நாட்​டைக் கட்டியெழுப்ப, இப்போது நல்ல தலைவரொருவர் கிடைத்திருக்கிறார் என்றும் கூறினார்.

அதனால், பொதுபல சேனா என்ற அமைப்பின் தேவை, இனி தேவைப்படாது எனும் பட்சத்தில், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, தமது அமைப்பைக் கலைத்துவிடத் தீர்மானித்துள்ளதாக, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X