2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மங்களவின் பசுமை பாதீடு

Editorial   / 2017 நவம்பர் 10 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் இராமானுஜம்

2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக, மக்கள் மீது சுமையைத் திணிக்காமல், நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் வாயுக்களில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வரி அறவீடுகள், நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுமென பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவை எவையும் அத்திட்டத்தின் ஊடாக முன்மொழியப்படவில்லை.

2018ஆம் ஆண்டுக்கான பாதீடு யோசனைகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்குவைத்து முன்வைக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டபோதிலும், அவை எவற்​றயும் இந்தத் திட்டத்தில் காணக் கிடைக்கவில்லை என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

6 அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்படாமையால், அரசாங்கம், எதிர்க்கட்சிகளிடம் பிடிகொடுக்காமல் யோசனை​களை முன்வைத்துள்ளது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .