2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும்  அமைச்சர்களின் நியமனங்கள் அதிகாரமற்றதெனத் தெரிவிக்கும் வகையிலான  உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை  ​மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த மனு மீதான விசாரணைகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 16,17 மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகைளைச் சேர்ந்த 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ​மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதிபதியுமான பிரித்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசகர ஆகியோரால் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் ​இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .