2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மைத்திரி நகைச்சுவை செய்வதாகக் குற்றச்சாட்டு

Editorial   / 2020 நவம்பர் 26 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறுக்கு விசாரணைகளின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நகைச்சுவையாக பதிலளித்து, நகைச்சுவை செய்கிறார் என, சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுமுன்தினம் (24) சாட்சியமளித்தார். அவரிடம் சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தனர்.

​தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவமான உயர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், குறுக்கு கேள்விகளை கேட்கும் போதே, முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு நடந்துகொண்டார் என சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

சிங்கபூர் சுற்றுலாவுக்குப் பின்னர், இந்தியா திருப்பதி வழிபாட்டுக்காக, உங்களுடைய பிள்ளைகள் எத்தனை பேர் பங்குபற்றினர் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு “தனக்கு ஞாபகமில்லை, மறந்துவிட்டேன்” என பதிலளித்தார். அப்பதிலில் திருப்தி கொள்ள முடியாது என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்  செயலாளர் சார்பில் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று, உடனடியாக நாட்டுக்குத் திரும்புவதற்காக, மூன்று விமான சேவைகள் பயணங்கள் இருந்தன. திட்டமிடப்பட்ட அந்த விமானத்தில் வருகைதராமை ஏன்? என, முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சார்பில் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, “ விமானங்கள் போவது, வருவது தொடர்பிலான நேரங்கள் ஜனாதிபதி என்றவகையில் எனக்குத் தெரியாது. அதிகாரிகள் எனக்கு நேரத்தை தெரிவித்ததன் பின்னர், நான் அங்குச் செல்வேன். எனக்கு ​சிகிச்சையளித்த வைத்தியர், 24 மணிநேரத்துக்குப் பின்னரே செல்வதற்கு எனக்கு அனுமதியளித்தார்.  விமானச் பயணத்தை இரத்துச் செய்திருக்கலாம். எனினும், தன்னுடைய தனிப்பட்ட சுகாதார நிலைமைகளையும் கவனத்தில் எடுக்காது. அன்றிரவே இலங்கைக்கு திரும்பினேன்” என்றார்.

அதன்பின்னர், பாதுகாப்பு ​அமைச்சின் முன்னாள் செயலாளர் ​ஹேமசிறி பெர்ணான்டோவின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தில்ஷான் ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குறுக்குக் கேள்விகளை கேட்டார்.

சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ஏப்ரல் 20,21 ஆம் திகதிகளில் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவோ அல்லது தொடர்பை ஏற்படுத்துவதற்கோ இயலாத நிலைமையில் இருந்தேன்” என்றார். ஆனால், நீர் 16ஆம் திகதியன்று நேரடியாக சிங்கபூருக்கு செல்லாது, இந்தியாவின் திருப்பதிக்கு வழிபடுவதற்கு சென்றது ஏன்” எனக் சட்டத்தரணி கேட்டார்.

அதற்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, “அது எனது வருடாந்த வழிபாட்டு பயணம்” என்றார்.

“ இலட்சக்கணக்கான பக்தர்கள் செல்லும் திருப்பதியில் வழிபாட்டுக்குச் செல்வது கடினமானது. ஆனால், 20,21 ஆம் திகதிகளில் தொலைபேசிக்கு பதிலளிக்க முடியாத வகையில் இருந்த உங்களுக்கு, திருப்பதிக்கு பயணிக்க முடிந்தது எவ்வாறு” என சட்டத்தரணி கேட்டார்.

“ மும்மனிகளின் ஆசீர்வாதம் உரித்தாகட்டும், கடவுள் துணை, அதற்கு கடுமையான வருந்தம் இருக்கவில்லை” என ஜனாதிபதி

“16ஆம் திகதி இந்த பயணத்தில் உங்களுடைய மனைவி, பிள்ளைகள் மூவரும் பங்கேற்றிருந்தனரா?’

சிரித்துகொண்டே அதற்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, “ பிள்ளைகள் மூவரும் சென்றார்களா என்பது ஞாபகத்தில் இல்லை. எனினும், மனைவி என்னுடன் வந்தார் என்பது நினைவில் இருக்கிறது.

அப்போது கடுமையாக கோபமடைந்த, குறுக்குக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த சட்டத்தரணி தில்ஷான் ஜயசூரிய,

“முன்னாள் ஜனாதிபதியே இது நகைச்சுவையான விடயமில்லை. ஜனாதிபதிக்கு இது ​பெரும் அச்சுறுத்தல், நாட்டின் ஜனாதிபதி ஒருவர் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். 16ஆம் திகதியன்று விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது, முன்னாள்​ பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, விமானத்துக்குள் ஏறி, செலுட் அடித்தார் என, இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் நீங்களே கூறியிருந்தீர்கள், அது நினைவிலிருக்கும் உங்களுக்கு, தன்னுடைய வந்த உங்களுடைய பிள்ளைகள் யாரென்பது நினைவில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றா நீங்கள் சொல்கின்றீர்கள்” எனக் கேட்டார்.

“எனக்கு உண்மையிலே​யே ஞாபகத்தில் இல்லை சுவாமினி” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .