2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மொட்டின் தலைவராகிறார் மஹிந்த?

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
தலைமைத்துவத்​தை ஏற்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அக்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கட்சியின் மாநாடு இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் எனவும் இதன்போ​தே, மஹிந்த மொட்டின் தலைமையை ஏற்கும்படி கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெளும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியிலிருந்து போட்டியிட்டு நாடாளுமன்றம் உறுப்பினராகிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன​ பெரமுனவின் தலைமையை ஏற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிப் பறிப்போகுமா என வினவப்பட்டமைக்கு, அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது எனவும், அவ்வாறான பிரச்சினைகளை எவராவது ஏற்படுத்த முயற்சித்தால், அதற்கு முகங்கொடுக்கத் தயார் எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .