2024 மார்ச் 28, வியாழக்கிழமை

105 தோட்ட பிரிவுகளில் கொரோனா தொற்று நீக்கி பிரயோகம்.

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம் 

கொரானா வைரஸ்சினை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தோட்டப்பகுதிகளில் கொவிட் வைரஸ் பரவுவதனை தடுப்பதற்குரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. என்று பலர் குற்றும் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதனை கட்டுப்படுத்த இன்று (28) நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட சுமார் 105 தோட்ட பிரிவுகளில் கிருமி தொற்று நீக்கி பயன்படுத்தப்பட்டன.

தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த வேலை திட்டத்துக்கு தோட்ட நலன்புரி உத்தியோகஸ்த்தர்கள் தோட்டத்தில் இளைஞர்கள் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதன் போது பிரதேச சபைத தலைவரால் தோட்டங்களுக்கு தொற்று நீக்கி மருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த தொற்று நீக்கி மருந்துகள் பொகவந்தலாவை, நோர்வூட், புளியாவத்த,டிக்கோயா,ஆகிய பிரதேசங்களை அண்டிய தோட்டங்களுக்கு பிரயோகிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X