2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அடிக்கல் நாட்டல்...

Kogilavani   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியா தொலைநோக்கு மற்றும் ஒரு இலட்சம் கிராமிய பாதைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஓல்டன் பீகொன்ஸ்பீல்ட் பிரதான வீதி, காபட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.
சுமார் 2.2 கிலோமீற்றர் வீதி,  50 மில்லியன் ரூபாய் செலவில் காபட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது. 
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், இன்று (3) நடைபெற்றது. 
இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் நிமல் லன்சாவின் வழிகாட்டலில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்டப்டன. 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X