2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அதிகாரிகளுக்கு பணிப்புரை…

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் சிறுபோகத்தின்போது மகாவலி வலயங்களில் நெற் பயிர்ச்செய்கையுடன் இணைந்ததாக உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கான விரிவான செயற்திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகாவலி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மகாவலி வலயத்தில் மிளகாய் உள்ளிட்ட உப உணவுப் பயிர்கள் செழிப்பாக பயிரிடப்பட்டு வந்தபோதிலும் தற்போது அவை அழிவடைந்துள்ளதுடன், அதிக செலவில் அவ்வுற்பத்திகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதனால் தேசிய உணவு உற்பத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கக்கூடிய வகையில் மகாவலி வலயங்களில் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான புதிய விவசாய செயற்திட்டமொன்றறை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை மகாவலி அதிகார சபையின் உள்ளக பதவி உயர்வுகளுக்குரிய நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .