2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கைத் தொடர்பில் அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்

Editorial   / 2018 மார்ச் 21 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹீசைன் இலங்கைத் தொடர்பில் வெளியிடும் அறிக்கைக்கு அமெரிக்கா தமது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துமென தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கு புறம்பாக நடைபெறும் கூட்டத்தொடர்களில் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கூட்டங்களில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒலிவடிவ ஊடக  அறிக்கையில் சுமந்திரன் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், 'புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய செயற்படவில்லை என்பதையும், பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லும் போக்கை கடைபிடிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதையும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினர். இந்த கூற்றுக்கு சாதகமான பதிலை ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன், அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி உள்ளிட்டவர்கள் வழங்கினர்.

அதேவேளை, இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹீசைன் இலங்கைத் தொடர்பில் வெளியிடும் அறிக்கைக்கு மறுமொழியாக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென நாம் அமெரிக்காவின் ஜெனீவாவிற்கான அதிகாரி கெலி கரியயை சந்தித்த சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுத்தோம். அறிக்கையில் ஆணையாளர் முன்வைக்கும் புதிய பரிந்துரைகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுத்தோம் அதற்கு குறித்த அதிகாரி சாதகமான பதிலை வழங்கினார்." எனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X