2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஒலுவில் பிரதேசத்தில் மினி சூறாவளி

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒலுவில் பிரதேசத்தில் நேற்று (01) இரவு 11 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக அப்பிரதேசத்தில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒலுவில் விவசாய விரிவாக்கல் நிலையத்துக்கு பாரிய தேசம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், இப்பிரதேசத்தில் நிறுவப்பட்டிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான மின் மாற்றியும் தேசமடைந்துள்ளதாக மின்சார சபை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இப்பிரதேசத்தில் இருந்த பாரிய மரங்கள் பல காற்றின் வேகத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடியோடு சரிந்து விழுந்தும் காண்படுகின்றன.

அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியின் ஒலுவில் மற்றும் பாலமுனைப் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள சில மின்கம்பங்களும், தொலைபேசி இணைப்புக் கம்பங்களும் உடைந்து காணப்படுகின்றன. இதனால் ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களின் சில பகுதிகளில் சில மணி நேரம் மின்துண்டிப்பு ஏற்பட்டிருந்தது.

குடியிருப்புக்களுக்கும் பலத்த தேசதம் ஏற்பட்டுள்ளன. கூரைகள் காற்றில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதுடன், குடியிருப்பின் சுவர்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அத்தோடு, பெறுமதியான பொருட்களும் சிதைவடைந்துள்ளதாகவும் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சில நிமிட நேரம் வீசிய இம்மினி சூறாவளி காரணமாக நெல் விவசாயச் செய்கைக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பலத்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாத நெற்பயிர்கள் நிலத்தில் வீழ்ந்து காணப்படுகின்றன. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் விவசாயச் செய்கைக்கும் பாரியளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X