2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொரோனா ஒழிப்புக்கு பௌத்த பீடங்கள் நன்கொடை

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு தலதா மாளிகை, மல்வத்தை – அஸ்கிரி விகாரைகள் 02 கோடி ரூபாய் அன்பளிப்புச் செய்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (28) முற்பகல் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டபோதே, பீடாதிபதிகள் மேற்படி அன்பளிப்பை வழங்கியுள்ளன.

தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதியை தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றார். கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்குகு தியவதன நிலமே நிலங்க தேலவினால் ஒரு கோடி ரூபாய், ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

மல்வத்தை மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை ஜனாதிபதி சந்தித்து, கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி விளக்கினார்.

மகாநாயக்க தேரரும் அதற்கு ஆசிர்வாதம் வழங்கி, அந்நிதியத்துக்கு 50 இலட்சம் ரூபாய் நிதியினை அன்பளிப்பு செய்தார். மல்வத்தை அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரரையும் ஜனாதிபதி சந்தித்தார்.

அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி, மகாநாயக்க தேரர் உள்ளிட்ட அஸ்கிரிய பீடத்தின் மகா சங்கத்தினருக்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி விளக்கினார்.

கொரோனா ஒழிப்பு நிதியத்துக்கு அஸ்கிரி விகாரையினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 50 இலட்சம் ரூபாய் மற்றும் மல்வத்தை, அஸ்கிரி விகாரைகளிடமிருந்து கிடைத்த ஆசிர்வாதங்களுக்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .