2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காணி விடுப்பு…

Editorial   / 2019 மார்ச் 25 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்  

யுத்த காலங்களிலிருந்து இராணுவத்தினர் வசமிருந்த காணிகளைக் கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தில், இன்று (25)  காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இராணுவப் பாதுகாப்பு நோக்கத்துக்காகப் பயன்படுத்த வந்த  5.5 ஏக்கர் காணிகளே, கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஐயசேகரவால்,  கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டன.

இதற்கமைய, திருகோணமலை மாவட்டத்தில், குச்சவெளி, திரியாயில்  3 ஏக்கர் காணியும், அம்பாறை மாவட்டத்தில், பெரிய நீலாவனையில் 0.5 காணியும், திருக்கோவில் பகுதியில் 2 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திணைக்களத் தலைவர்கள், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், இராணுவத் தளபதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .