2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (17) கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வு, கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்றது.

“பேண்தகு தேசிய அபிவிருத்தியில் தொழில் வல்லுனர்களின் பங்கு” என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை இம்மாநாடு நடைபெறுவதுடன், தேசமான்ய பேராசிரியர் மொஹான் முனசிங்கவினால் அங்குரார்ப்பண கூட்டத்தொடரின் முக்கிய உரை நிகழ்த்தப்பட்டது. 

ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியை வகித்த நெஸ்பி பிரபு இந்த அங்குரார்ப்பண கூட்டத்தொடரின் கௌரவ அதிதியாக கலந்துகொண்டார். 

ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை, ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் ஆகிய பல்வேறு மன்றங்களில் இலங்கைக்காக குரல் கொடுத்து, கருத்துக்களை முன்வைத்த நெஸ்பி பிரபுவுக்கு ஜனாதிபதி ஒரு விசேட நினைவுச் சின்னத்தை வழங்கிவைத்தார். 

அதேவேளை, ஜனாதிபதிக்கும் விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன், இலங்கை தொழில் வல்லுனர்களின் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி லலித் விஜயதுங்கவின் சேவையை பாராட்டி விருது ஒன்று வழங்கிவைக்கப்பட்டது. 

இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் நிசங்க பெரேரா, செயலாளர் பொறியியலாளர் சாந்த செனரத், இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சமன் வருசவிதான ஆகியோர் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .