2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழகக் கல்வி அமைச்சர்- இ.தொ.காவினர் சந்திப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியா தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினரை, கொழும்பில் உள்ள ஆரம்பக் கைத்தொழில் அமைச்சில்,நேற்று (20) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, இந்திய வம்சாவளி மக்களுக்கு நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்துக் கொண்டதுடன், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டறிந்துக்கொண்டார்.

இச்சந்திப்பில், ஆரம்பக் கைதொழில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னாள் நாடான்ற உறுப்பினர்கள், இலங்கை இந்தியப் பேரவையின் உறுப்பினர்கள் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .