2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது...

Editorial   / 2019 மே 19 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்திக்காக, மட்டக்களப்பு கறுவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில்,  ஆத்மசாந்தி பிரார்த்தனையும் விசேட திருப்பலி  ஒப்புக்கொடுத்தலும் நேற்று (19) இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு(21) அன்று,  மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 29பேர் உயிரிழந்ததுடன் 74 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு,  இந்த ஒளிச்சுடர் ஏற்றப்பட்டது.

குறித்தத் தாக்குதல்கள் நடைபெற்று, செவ்வாய்க்கிழமையுடன் (21) ஒருமாதம்  பூர்த்தியாகவுள்ள  நிலையில் இந்த விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை பிரைனர் செலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதன்போது ஆலய முன்றிலில் உயிர்நீர்த்தவர்களுக்காக சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X