2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதமர் இல்லத்தில் பௌர்ணமி தின நிகழ்வு...

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் அமாதம் சிசிலச தர்ம உபதேசத் தொடரின் 205ஆவது உபதேச நிகழ்வு, விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (29) நடைபெற்றது.

பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும் உன்னத நோக்கத்தில், இந்த உபதேசத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த கொழும்பு ஹிணுபிடிய கங்காராம விகாராதிகாரி கலாநிதி வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரரை வரவேற்றார்.

புண்ணியம் செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதுக்கும் அவசியமான ஆறுதல், பலம் மற்றும் ஞானம் என்பன கிடைக்கும் என வணக்கத்திற்குரிய தேரர் உபதேசித்தார்.

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடைபெற்ற தர்ம உபதேசம் பக்தர்களின் பங்கேற்பின்றி, பிரதமர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று நிலைமையிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்குமாறும் இதன்போது பிரார்த்திக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .