2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புனித திரிபீடகம் தேசிய மரபுரிமையாக பிரகடனம்

Editorial   / 2019 ஜனவரி 05 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித திரிபீடகத்தை, இலங்கையின் தேசிய மரபுரிமையாக,  உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்வு, இன்று (05), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், மாத்தளையிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க அலுவிகாரையில் நடைபெற்றது.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு நடத்தப்பட்டதற்கு அமைய, நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளில், சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுத்தபீடகம், அபி தம்ப பீடகம் மற்றும் வினைய பீடகம் ஆகிய 3 பீடகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தத் திரிபீடகம், கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மஹிந்த தேரரின் வருகையால், இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றப் பேறாகவும் மரபுரிமையாகவும் திகழ்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .