2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மலையகத்தில் நினைவேந்தல்…

Editorial   / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்,எஸ்.சதீஸ்

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் போது,  கொல்லப்பட்ட மக்களை  நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் இன்று (21)  மத வழிபாடுகள் இடம்பெற்றன.

காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில் மணியோசை எழுப்பி வழிபாடுகளில் ஈடுபடுமாறும், வீடுகளில் விளக்கேற்றி இருநிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்திருந்தார்.  ஏனைய மதத்தவர்களிடமும் அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

இதன்படி மலையகத்திலுள்ள தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.  அத்துடன், தேவாலயங்கள், கோவில்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலும் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில், ஹட்டனில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையில் அருட்தந்தை தேவதாசன் செங்கன் தலைமையில் இருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.

மிகவும் பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளியைப் பின்பற்றியே வழிபாடுகள் இடம்பெற்றன. ஒரு சிலரே பங்கேற்றிருந்தனர். அதேபோல் பெரும்பாலான மக்கள் வீடுகளில் விளக்கேற்றி இருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X