2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மலையகத்தில் நீர் மட்டம் அதிகரிப்பு

Editorial   / 2019 ஜூலை 20 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமகா, மலையகத்திலுள்ள நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

கடும் மழை காரணமாக, நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரை வெளியேற்றுவதற்காக, இன்று (20) நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது. 

அந்தவகையில் விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு மேலாக நீர் வெளியாகுவதோடு, மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டிருந்தது.

அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .