2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘2 வெளிநாட்டு லீக்குகளிலேயே விளையாடலாம்’

Editorial   / 2017 நவம்பர் 15 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையால் ஒப்பந்தமளிக்கப்பட்டுள்ள வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளில் விளையாடுவதற்கு, ஆண்டொன்றுக்கு இரண்டு தடையில்லாச் சான்றிதழ்களே வழங்கப்படும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி நிஸாமுடீன் செளத்திரி தெரிவித்துள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் இந்தத் தீர்மானம் குறித்து, புதிய கட்டுப்பாட்டுகள் குறித்து விவரிக்கும் கடிதமொன்றின் மூலம் ஒப்பந்தமளிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்தியன் பிறீமியர் லீக், பிக் பாஷ் லீக், பாகிஸ்தான் சுப்பர் லீக், கரீபியன் பிறீமியர் லீக்குகளில் பங்கேற்றுவரும் ஷகிப் அல் ஹஸனையே இது  பெரும்பாலும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .