2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

2030க்காக உருகுவே, ஆர்ஜென்டீனா

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள, கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடத்துவதற்காக, உருகுவே, ஆர்ஜென்டீனா ஆகிய 2 நாடுகளும் இணைந்து போட்டியிடவுள்ளன. இதற்கான அறிவிப்பை, உருகுவே ஜனாதிபதி வெளியிட்டார்.

இதற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நிகழ்வில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

தென்னமெரிக்க நாடுகளான இவ்விரண்டு நாடுகளும், இணைந்து உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவந்த நிலையில், தற்போது இது அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னமெரிக்க நாடான பிரேஸில், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத்தை நடத்தியிருந்தது. 2018இல் ரஷ்யாவும் 2022இல் கட்டாரும், உலகக் கிண்ணத்தை நடத்தவுள்ளன. 2026இல், ஐ.அமெரிக்கா - மெக்ஸிக்கோ - கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .