2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பியன்ஸ் லீக்: ஜுவென்டஸை வீழ்த்தியது பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுடனான குழு ஜி போட்டி ஒன்றில் அவ்வணி 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.

பார்சிலோனா சார்பாக, உஸ்மான் டெம்பிலி, லியனல் மெஸ்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, பெல்ஜியக் கழகமான கிளப் ப்ரூகேயின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் இத்தாலிய சீரி ஏ கழகமான லேஸியோவுக்குமிடையிலான குழு எஃப் போட்டியொன்று 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோக்கின் கொரெரேராவும், க்ளப் ப்ரூகே சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹன்ஸ் வனகென்னும் பெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .