2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சமநிலையில் சிற்றி – வெஸ்ட் ஹாம் போட்டி

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும் மன்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை பில் பொடென் பெற்றதோடு, வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மிகைல் அந்தோனியோ பெற்றிருந்தார்.

இதேவேளை, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், செல்சிக்குமிடையிலான போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X