2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அதிகம் சம்பாதிக்கும் கால்பந்தாட்டவீரராக மெஸ்ஸி

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போர்ப்ஸ் சஞ்சிகையின் அதிகம் சம்பாதிக்கும் கால்பந்தாட்ட வீரர்களின் பட்டியலில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான லியனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார்.

ஆண்டொன்றுக்கு 126 மில்லியன்கள் ஐக்கிய அமெரிக்க டொலர்களை பார்சிலோனாவின் அணித்தலைவரான லியனல் மெஸ்ஸி சம்பாதிப்பார் என போர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளதுடன், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 117 மில்லியன்கள் ஐக்கிய அமெரிக்க டொலர்களுடன் குறித்த பட்டியலில் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றார்.

மூன்றாமிடத்தில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான நெய்மர் காணப்படுவதுடன், நான்காமிடத்தில் பரிஸ்ஸா ஜெர்மைனில் அவரது சக முன்களவீரரான கிலியான் மப்பே காணப்படுகின்றார். 96 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை நெய்மர் சம்பாதிப்பதுடன், 42 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கிலியான் மப்பே சம்பாதிக்கின்றார்.

ஐந்தாமிடத்தில் 37 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைச் சம்பாதிக்கின்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான மொஹமட் சாலா காணப்படுகின்றார்.

ஆறாம், ஏழாம், எட்டாம், ஒன்பதாம், 10ஆம் இடங்களில் முறையே போல் பொக்பா, அந்தோனி கிறீஸ்மன், கரெத் பேல், றொபேர்ட் லெவன்டோஸ்கி, டேவிட் டி கியா உள்ளிட்டோர் காணப்படுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X