2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் மரே

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான அன்டி மரே நேரடியாகப் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ள்ளது.

தற்போது 110ஆவது இடத்தில் காணப்படும் பிரித்தானியாவின் அன்டி மரே, தனது விளையாடும் காலத்தைப் பாதுகாப்பதற்காக இடுப்பு மீளமைத்தல் சத்திரசிகிச்சையை கடந்தாண்டு மேற்கொண்டிருந்ததுடன், நேற்று முன்தினம் அதிகாலையில் முடிவுக்கு வந்த  ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் இரண்டாவது சுற்று வரை முன்னேறிருந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த அன்டி மரே, 2017ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று கிரான்ட்ஸ்லாம் பட்டங்களை அன்டி மரே வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரானது இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கின்றது.

இந்நிலையில், பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியதுடன், விம்பிள்டன் இறுதிப் போட்டி வரை 2014ஆம் ஆண்டு முன்னேறிய கனடாவின் யுகினியே போச்சார்ட்டும் பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் நேரடியாகப் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .