2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ODI தொடர் இன்று ஆரம்பிக்கின்றது: இங்கிலாந்தை வீழ்த்துமா பாகிஸ்தான்?

Editorial   / 2019 மே 08 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரானது, இலண்டனில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

அந்தவகையில், இங்கிலாந்தில் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கான மிகச் சிறந்த முன்னோட்டத் தொடராக குறித்த தொடர் அமைகையில், உலகக் கிண்ணத் தொடருக்கான தமது தயார்படுத்தல்களை வழமையாக இரண்டு அணிகளும் இத்தொடரில் மேற்கொண்டிருக்கும் என்ற நிலையில், இத்தொடரானது அதற்கு மேலாக இரண்டு அணிகளிலுமுள்ள குறிப்பிட்ட சில வீரர்கள் இறுதி நேரத்தில் உலகக் கிண்ணக் குழாமில் இடம்பெறுவதற்கு வாய்ப்பை வழங்கும் தொடராகக் காணப்படுகின்றது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் தமக்காக தற்போதே விளையாடத் தகுதிபெற்றுள்ள ஜொவ்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான் ஆகியோரை தாம் உலகக் கிண்ணக் குழாமில் தாம் ஏற்கெனவே தெரிவுசெய்துள்ள டேவிட் வில்லி, லியம் பிளங்கெட், மார்க் வூட், டொம் கர்ரன் ஆகியோரை விடச் சிறந்தவர்களாக என சோதிப்பதற்கான தொடராக இத்தொடர் காணப்படுகின்ற நிலையில், இந்த அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களின் பெறுபேறுகளும் இத்தொடரில் உன்னிப்பாக நோக்கப்படும்.

மறுபக்கமாக பாகிஸ்தானைப் பொறுத்தவரையில், அவ்வணிக்காக கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்டிருந்தபோதும் அண்மைய காலங்களில் பிரகாசித்திருக்காத மொஹமட் ஆமிரை விட தாம் ஏற்கெனவே உலகக் கிண்ணக் குழாமில் தேர்வு செய்த ஜுனைட் கான் சிறந்தவரா என இத்தொடரில் இருவரும் பங்கேற்கும் பட்சத்தில் முடிவு செய்து கொள்ள முடியும் என்பதுடன், தொடர்ச்சியான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருக்காதபோதும் அதிரடித் துடுப்பாட்டவீரராக இருக்கும் ஆசிஃப் அலி, இங்கிலாந்து ஆடுகளங்களில் எவ்வாறு செயற்படுவார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .