2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: அஸ்டன் வில்லாவிடம் தோற்றது லெய்செஸ்டர்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 19 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்று  இரவு நடைபெற்ற அஸ்டன் வில்லாவுக்கு எதிரான போட்டியில் அவ்வணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

அஸ்டன் வில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை றொஸ் பார்க்லி பெற்றிருந்தார்.

இந்நிலையில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணி, வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுக்கெதிரான போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, ஹரி கேன் இரண்டு கோல்களையும், சண் ஹெயுங் மின் ஒரு கோலையும் பெற்றனர். வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் சார்பாக, பேபியன் பல்புவெனா, மனுவல் லன்ஸினி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .