2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அடுத்தாண்டுடன் விலகுகிறார் ட்ரெவர் பெய்லிஸ்

Editorial   / 2018 ஜனவரி 09 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து, அடுத்தாண்டு நடைபெறும் ஆஷஸ் தொடர் முடிவில் தனது ஒப்பந்தம் முடிவடையும்போது ட்ரெவர் பெய்லிஸ் விலகவுள்ளார்.

55 வயதான ட்ரெவர் பெய்லிஸ், 2015ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரின் பயிற்றுவிப்பின் கீழ் 4-0 என்ற ரீதியில் ஆஷஸை இங்கிலாந்து இழந்துள்ளது.

எவ்வாறெனினும், ட்ரெவர் பெய்லிஸின் பயிற்றுவிப்பின் கீழ், இங்கிலாந்தில் வைத்து ஆஷஸை இங்கிலாந்து 2015ஆம் ஆண்டு வென்றதுடன், தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் தென்னாபிரிக்காவில் வைத்து வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .