2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரையிறுதியில் இன்டர், யுனைட்டெட்

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோப்பா லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகியன தகுதிபெற்றுள்ளன.

ஜேர்மனியின் புண்டெலிஸ்கா கழகமான பயேர் 04 லெவர்குசனை தமது காலிறுதிப் போட்டியில் இன்டர் மிலனும், டென்மார்க் கழகமான கொப்பென்ஹகனை தமது காலிறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.

ஜேர்மனியின் டுஸல்ஃபோர்ட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பயேர் 04 லெவர்குசனை இன்டர் மிலன் வென்றிருந்தது.

இன்டர் மிலன் சார்பாக, நிக்கொலோ பரெல்லா, றொமெலு லுக்காக்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பயேர் 04 லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கை ஹவேர்ட்ஸ் பெற்றிருந்தார்.

இதேவேளை, ஜேர்மனியின் கொலோனில் நடைபெற்ற போட்டியில் மேலதிக நிமிடத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் கொப்பென்ஹகேனை மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றிருந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ப்ரூனோ பெர்ணான்டஸ் பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .