2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரையிறுதியில் இங்கிலாந்து, சுவிற்ஸர்லாந்து

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்தும் சுவிற்ஸர்லாந்தும் தகுதிபெற்றுள்ளன.

வெம்ப்ளியில் நேற்றிரவு இடம்பெற்ற குரோஷியாவுடனான போட்டியில் பிந்தங்கியிருந்தபோதும் மீண்டு வந்து 2-1 என்ற கோல் கணக்கில் வென்று தமது குழு ஏ4இல் முதலிடம் பெற்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதிபெற்றுள்ளது.

இதேவேளை, தமது நாட்டில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற பெல்ஜியத்துடனான போட்டியில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்தபோதும் இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்று குழு ஏ2இல் வென்றதன் மூலமே சுவிற்ஸர்லாந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X