2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரையிறுதியில் யுனைட்டெட், டொட்டென்ஹாம்

Editorial   / 2018 மார்ச் 18 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு மன்செஸ்டர் யுனைட்டெட்டும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் தகுதிபெற்றுள்ளன.

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இத்தொடரில், தமது காலிறுதிப் போட்டிகளில் முறையே பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன், சுவான்சீ சிற்றி ஆகியவற்றை வென்றே மன்செஸ்டர் யுனைட்டெட்டும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் அரையிறுதிப் போட்டிக்களுக்குத் தகுதிபெற்றுள்ளன.

தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் 37ஆவது நிமிடத்தில் நெமஞா மட்டிக்கின் உதையை றொமேலு லுக்காக்கு கோலாக்க முன்னிலை பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட், போட்டியின் 83ஆவது நிமிடத்தில் கிடைக்கப் பெற்ற பிறீ கிக்கை அஷ்லி யங் உதைக்க அதை நெமஞ்சா மற்றிக் கோலாக்கியதோடு 2-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இதேவேளை, சுவான்சீ சிற்றி அணியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியின் 11ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் பெற்ற கோலின் மூலமாக முன்னிலை பெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், போட்டியின் முதற்பாதி முடிவில் எரிக் லமெலா பெற்ற கோலின் மூலம் தமது முன்னிலையை இரட்டிப்பாக்க்கிக் கொண்டிருந்தது.

பின்னர், இரண்டாவது பாதியில், போட்டியின் 62ஆவது நிமிடத்திலும் கிறிஸ்டியன் எரிக்சன் பெற்ற கோலோடு 3-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X